முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சூர்யா சிவா பேசியது சைதை சாதிக் பேசியதைவிட மோசம்- காயத்ரி ரகுராம்

பெண்களை விமர்சித்து திமுக பிரமுகர் சைதை சாதிக் பேசியதைவிட மோசமாக பாஜக பிரமுகர் சூர்யா சிவா பேசியிருப்பதாக அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகையாகவும், நடன இயக்குநராகவும் பிரபலமடைந்தவர் காயத்ரி ரகுராம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். சமீபகாலமாக எதிர்க்கட்சினரை விமர்சித்தும், சொந்த கட்சியில் தனக்கு எதிராக செயல்படுபவர்கள் குறித்தும் டிவிட்டரில் காயத்ரி ரகுராம் தெரிவித்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்தில் பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மிரட்டல்விடுத்து அக்கட்சியின் ஓபிசி அணி மாநிலபொதுச் செயலாளர் சூர்யா சிவா பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சூர்யா சிவாவிற்கு கண்டனம் தெரிவிக்கும்விதமாக பதிவு ஒன்றை வெளியிட்ட காயத்ரி ரகுராம், சூர்யா சிவாவிற்கு கட்சியில் சேர்ந்த உடனேயே பதவி கொடுத்தது குறித்தும் கண்டித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் வெளி மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு மாநில தலைவராக உள்ள காயத்ரி ராகுராம், அந்த பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் 6 மாதத்திற்கு  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த நடவடிக்கை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காயத்ரி ராகுராம், கடந்த 8 ஆண்டுகளாக சொந்த வாழ்க்கை மற்றும், சினிமா வாழ்க்கை ஆகிய இரண்டையும் மறந்து பாஜகவின் வளர்ச்சிக்காகவும், தேசத்திற்காகவும் தாம் பாடுபட்டதாகத் தெரிவித்தார். ஆனால் தம்மிடம் எந்த விளக்கமும் கேட்காமல் தம் மீது சஸ்பெண்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய காயத்ரி ரகுராம், உண்மையை பேசியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.  பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தாம் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக  தெரிவிக்கப்பட்ட வார்த்தைகள் தம்மை மிகவும் காயப்படுத்திவிட்டதாகவும் காயத்ரி ரகுராம் வேதனை தெரிவித்தார்.

சூர்யா சிவா பாஜக பெண் நிர்வாகியிடம் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, திமுக பிரமுகர் சைதை சாதிக் பேசியதைவிட சூர்யா சிவா  மிகவும் மோசமாக பேசியிருப்பதாக காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்தார். பெண்கள் குறித்து யார் தவறாக பேசினாலும் அதனை தாம் தட்டிக் கேட்பேன் என்றும் அவர் தெரிவித்தார். சூர்யா சிவா பாஜகவிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய காயத்ரி ரகுராம், அவரை கைது செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

போதைக்கு அடிமையான இளைஞர்கள்; நல்வழிப்படுத்திய காவல் கண்காணிப்பாளர்

G SaravanaKumar

நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு

Halley Karthik

இலங்கையில் தமிழர்கள் உட்பட 38 பேர் இணை அமைச்சர்களாக பதவியேற்பு

Jayakarthi