சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… இன்னொரு ஹீரோயின் இவரா?

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த், விஜய்க்கு பிறகு ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்து வைத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் வீடியோ ஜாக்கி, தொகுப்பாளர் என வளர்ந்து வந்த அவர் தனுஷின் 3 படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மெரினா, எதிர்நீச்சல் என தனது திறமையான மற்றும் நகைச்சுவை கலந்த நடிப்பால் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக வலம் வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் இயக்கத்தில் நடித்துள்ளார். மேலும், சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். தொடர்ந்து, சிவகார்த்திகேயன் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

இந்த படம் டைம் டிராவல் கதையில், காதல் கதைக்களத்தில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல நடிகை கயாடு லோஹர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் பிரதீப் ரங்கநாதம் நடிப்பில் வெளியான டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிபார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.