7 கோடி பார்வைகளை கடந்த ‘காவாலா’ பாடல் – மகிழ்ச்சியில் “ஜெயிலர்” படக்குழு!

ஜெயிலர் படத்தில் வெளியான முதல் பாடலான ’காவாலா’  2 வாரங்களில் 7 கோடி பார்வைகளை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.     நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம், ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள…

ஜெயிலர் படத்தில் வெளியான முதல் பாடலான ’காவாலா’  2 வாரங்களில் 7 கோடி பார்வைகளை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

 

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம், ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தமன்னா, சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கும் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆக.10-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். ஆக்‌ஷன் படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ கடந்த ஜூலை 8-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதில் தமன்னா நடனமும், ரஜினியின் ஸ்டைலான தோற்றமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்தப் பாடல் இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன. தமன்னா தாறுமாறாக ஆடிய இப்பாடல் இணையத்தில் செம வைப் மெட்டீரியலாக மாறி உள்ளது. தற்போது காவாலா பாடல் வெளியாகி 2 வாரங்கள் ஆகிய நிலையில் 7 கோடி பார்வைகளை கடந்துள்ளது என படக்குழு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.. யூடியூப், ஸ்பாடிஃபை போன்ற தளங்களில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தை ‘காவாலா’ பாடல் தக்கவைத்துள்ளது.

https://twitter.com/sunpictures/status/1683787312663269376?t=GLYDKsqtna9uLcmLlHITRQ&s=08

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ம் தேதி  நடக்கவுள்ளதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்தது. இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலானது. அந்த வீடியோவில் நடிகர்கள் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், சுனில், ரம்யாகிருஷ்ணன், தமன்னா, அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்பதாக வீடியோவில் குறிப்பிடப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.