வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!

புத்தாண்டு தினமான இன்று வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல்,…

புத்தாண்டு தினமான இன்று வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இதில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதத்துக்கு 2 முறை என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில், 2024 – ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் 2024-ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1924.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த மாதம் 22-ஆம் தேதி ரூ.39 குறைக்கப்பட்ட நிலையில், ரூ.1,929-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இந்நிலையில், தற்போது விலை மேலும் குறைக்கப்பட்டிருப்பதன் வாயிலாக  ரூ.1924.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.