பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் நேற்று அதிகாலை மக்கள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ரமலான் நோன்புக்காக அவர்கள் உணவு சமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்குள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடத்தில் சிலிண்டர் வெடித்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து சரிந்துள்ளது. இதில் ஏராளமான மக்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கினர். இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இரங்கல் தெரிவித்துள்ளார். ரமலான் நோன்பு தொடங்கிய முதல் நாளிலேயே கியாஸ் சிலிண்டர் வெடித்து 16 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.







