காலணி மாலை அணிவித்து அறிஞர் அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் அவமதிப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலை அமைந்துள்ளது. இந்த சிலை மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்தும் ஆ. ராசாவின் உருவப்படத்திற்கு செம்புள்ளி கரும்புள்ளி வைத்து அவரது உருவப்படத்துடன் அண்ணா சிலை மீது மாட்டி விட்டு அண்ணாவின் தலை பகுதியில் திமுக கட்சிக் கொடியைக் கொண்டு மூடிவிட்டுச் சென்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிகாலையில் அண்ணா சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து இருப்பதைக் கண்ட அப்பகுதியினர் கண்டமங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து சென்ற போலீசார் அண்ணா சிலை மீது இருந்த செருப்பு மாலையையும் ஆ. ராசாவின் புகைப்படத்தினை அகற்றினர்.
Anna statueஇதனைத் தொடர்ந்து கண்டமங்கலம் போலீசார் அண்ணா சிலையை அவமதிக்கும் விதமாகச் செருப்பு மாலை அணிவித்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். விழுப்புரம் புதுச்சேரி செல்லக்கூடிய முக்கிய சாலையான கண்டமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலையை அவமதித்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.