அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இளையராஜா தெரிவித்த கருத்துக்களை நீங்கள்தான் எழுதிக்கொடுத்தீர்கள் என்று சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகிறேதே? இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், அரசியல்வாதி என பன்முக ஆளுமையான கங்கை அமரனிடம் தனியார் யூ-டியூப் சேனல் நெறியாளர் முன் வைத்த கேள்வி இது தான்!
What non Sense of you Talking about me..? ஒரு ஜெண்டில் மேனை பாத்து கேக்குற கேள்வியா இது..? என்பது போல் வடிவேல் பாணியில் மிகச்சுலபாக அந்த குற்றச்சாட்டை அவர் மறுத்திருக்கலாம் அல்லது கடந்து சென்றிருக்கலாம். மாறாக சந்திரமுகியில் வரும் கங்காவை போல் முழு சந்திரமுகியாக மாறினார் கங்கை அமரன். ‘ஒதலவா நன்னு ஒதலவா’ என்பது போல ‘நானா எழுதிக்கொடுத்தேன்.. நானா எழுதிக்கொடுத்தேன்?’ என்று வெடித்து கொதிக்க தொடங்கியவர் அடுத்த 10 நிமிடங்களுக்கு அந்த அறையையே அதகளம் செய்துவிட்டார்.
அடுத்து நெறியாளர் கேள்வி கேட்க முயற்சிக்கும் போதெல்லாம் ஒருமையில் பேசி அவரை அடக்க முயற்சித்தவர், ‘நீ..வா.. போ.. எனத்தொடங்கி, யோவ்… என்னய்யா, போய்யா என விளித்ததோடு, ஏஏஏஏய்ய்ய்ய்…ஊ..ய்ய்ய்ய்ய்… வோய்ய்ய்ய்ய்.. என நடிகர் கார்த்திக் போல வாய்ஸ் எடுத்து மிரட்டியெடுத்தார்.
நெறியாளரும், ‘நான் அப்படி சொல்லல சார் சமூக வலைதளத்துல அப்படி பேசிக்குறாங்கன்றத உங்கள்ட்ட கேள்வியா முன் வைக்குறேன்’ என விளக்கம் கொடுக்க முயற்சிக்க, ‘எந்த சமூகத்துலயா சொன்னான், சும்மா சமூகம் சமூகம்ன்ற.. அப்படி
பேசுறவன் மடையன், எழுதுறவன் முட்டாள், அப்படி நினைக்குறவன் அறிவில்லாத நாய்’ போன்ற பல்வேறு நவ நாகரீகமான வார்த்தைகளால் விமர்சகர்களுக்கு அர்ச்சனை செய்தார். கொஞ்சம் விட்டிருந்தாலும் பத்திரிகையாளர் என்று கூட பார்க்காமல் அவரை பாய்ந்து சம்பவம் செய்திருப்பார் என்பது போலத்தான் அந்த வாக்குவாதம் நடைபெற்றது.
எல்லாம் முடிந்து கடைசி கட்டம் வரும்போது, ‘ஆமாய்யா நான் தான் எழுதிக்கொடுத்தேன் இப்போ என்னான்ற?’ என்று ஒரே போடாக போட்டவர், அது என் இஷ்டம்! எனக்கு புடிக்கும் உனக்கென்ன? என்று கூறி உட்கார்ந்தவாரே இரண்டு கால்களையும் குதிரை போல் தூக்கி போட்டு துள்ளினார். கவுண்டமணி போல இரண்டு கட்டை விரலையும் ப்ரஸ் பண்ணி கிருட்டு கிருட்டு என சுத்தி ஆங்கரை அட்டாக் செய்துவிடுவாரோ என்று கூட பார்ப்பவர்கள் பதறி போனார்கள். நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை! நடந்திருந்தால்..
‘வெத்தல போட்ட சோக்குல
நான் கப்புன்னு குத்துன்னேன் மூக்குல
அட வந்துது பாரு ரத்தம்
இந்த ‘அமரன்’ மனசு சுத்தம்
என்கிற பாடலுடன் அந்த வீடியோ காட்சிகளை போட்டு இணையவாசிகள் Vibe செய்திருப்பார்கள்.. இணையவாசிகள் இப்படி Vibe செய்கிறார்களே என அடுத்த பேட்டியில் மீண்டும் அவரிடமே கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கும். மீண்டும் அவர்களை வண்டி வண்டியாக திட்டி தீர்த்திருப்பார் கங்கை அமரன்!
இதனைத்தொடர்ந்து, இருந்தாலும் அம்பேத்கருடைய அடிப்படை கோட்பாடுகள் என்று மீண்டும் நெறியாளர் கேள்வியை தொடர முயற்சிக்க, எனக்கு ஜாங்கிரி புடிக்கும், பால்கோவா திங்க புடிக்கும், உங்களுக்கு என்னயா, என்ன திங்க வேணாம்னு சொல்ல நீ யார்..?’ என்று ஜாங்கிரியை வைத்தே மீண்டும் அங்கரியானார். இதைக்கண்ட நெட்டீசன்கள் எல்லாம், அரிசி மண்டி ஒன்றில் கவுண்டமணியிடம், ஒருவர், ’ஏய் மோசக்காரா யார ஏமாத்த பாக்குற என்கிற காமெடி மீம்ஸ்களை போட்டு பொளந்துவருகின்றனர்.
இளையராஜாவுக்கு அவர் கருத்து சொல்ல உரிமை இல்லையா? என்ற தர்கமான கேள்வியை தார்மீகமே இல்லாமல் ஏய்ய்ய்.. உய்ய்ய்.. இருய்யா பொறுய்யா.. என்று ஒருமையில் பேசி ஜாங்கரி..பால்கோவா..என விதவிதமாக பலகாரம் சுட்டுள்ளார்
கங்கை என்பதே பெரும்பாலோனர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இளையராஜாவுக்கு கருத்து சொல்ல உரிமையில்லையா? என்ற கேள்விக்கு அடுத்த நொடியே ‘ஏய் வாய மூடு’ எனக்கூறி நெறியாளரின் வாயை அடைக்க முயற்சிக்கிறார். ‘உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?’ எனவும் அவரின் இந்த செயல் விமர்சிக்கப்பட்டு வருகிறது
சில வருடங்களுக்கு முன்பு இளையராஜவிடம் கேள்வி கேட்ட நிருபரிடம், ‘உனக்கு அறிவிருக்கா’ என இதேபோல் தான் இளையராஜாவும் உருமையில் உறுமினார். ‘அறிவு இருக்க போயிதான் கேள்வி கேக்குறேன்னு’ நிருபர் பதில் சொல்ல, ‘ உனக்கு அறிவு இருக்குன்னு எந்த அறிவ வச்சி கண்டுபிடிச்சே?’ என பதிலுக்கு ஒரு கிடுக்குப்பிடி கேள்வியை போட்டார் பாருங்கள் இளையராஜா! அந்த கேள்வியை கேட்டதும் உலகின் அசையும் பொருள் அனைத்து அப்படியே நின்றுவிட்டதாக நம்மை உணரவைத்தது அந்த கேள்வி. ‘தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்..அவன் யார்? எனும் புலிக்கேசியின் விடுகதைக்கு கூட பதில் கிடைத்துவிடும், ஆனால் இளையராஜவின் இந்த டார்வின் தனமான கேள்விக்கு ‘ஹேமோ சேப்பியன்ஸ்’ இனத்திடமே பதில் இல்லை என்பதே காலம் நமக்கு உணர்த்தும் பாடம்! அவரையே ஓவர் டேக் செய்யும் வகையில் கங்கை அமரனின்
அதுமட்டுமல்லாமல் இளையராஜா ஆயிரம் படங்களுக்கு மேல் பாட்டு போட்டிருக்கார், அதெல்லாம் நான் தான் போட்டு கொடுத்தேன்னு சொல்லுவீங்களா..? என்றும் பகீர் கேள்வி எழுப்பினார். கங்கை அமரன் இசையமைத்த பல பாடல்கள் இளையராஜாவின் கணக்கில் எழுதப்பட்டத்தை நாம் அறிந்திருப்போம். இளையராஜாவின் அம்பேத்கர்-மோடி ஒப்பீடு
குறித்த கட்டுரையிலும் இதை குறிப்பிட்டிருந்தோம். ஒருவேளை அந்த ஏக்கத்தில் கூட கங்கை அமரன் இதுபோன்று கோவத்திற்கு ஆளாகியிருக்கலாம் என்றும் இணையவாசிகள் சமூக வளைதளத்தில் கணித்து வருகின்றர்.
கடந்த சில நாட்களாகவே தந்தை சினிமா பிரபலங்கள் செய்யும் சம்பவங்களுக்கெல்லாம் அவர்களின் மகன் சினிமா பிரபலங்கள் தான் ‘பைசல்’ செய்து வருகின்றனர். இளையராஜா- யுவன் சங்கர் ராஜா, பாக்யராஜ் – சாந்தனு, விஜய் – சந்திரசேகர்( இது பல வருடங்களாக நடந்து வருவதாக கணிக்கப்படுகிறது) என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தற்போது கங்கை அமரனின் செய்த இந்த ‘டேமேஜை’ வெங்கட் பிரபுவோ அல்லது பிரேம்ஜீ யோதான் கலத்தில் இறங்கி கிளியர் செய்வார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
https://twitter.com/Premgiamaren/status/1517139614225821696
‘அப்படினா அவங்க ரெண்டு பேரும் யுவன் மாதிரியே கருப்பு சட்டைக்கு ஆர்டர் கொடுத்துருவாங்களா?’ என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் ப்ரேம்ஜி ஆல்ரெடி தன்னுடைய ட்விட்டர் Profile picture-ல் கருப்பு சட்டை போட்ட படத்தைத்தான் வைத்திருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா, கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என்று ஸ்டேட்டஸ் போட்ட மூன்றாவது நாளிலேயே எப்படியும் இதேபோல் நமக்கும் நடக்கும் எனக்கருதி ‘அட்வான்ஸ் புக்கிங்கில்’ கருப்பு சட்டை profile picture-ஐ பிரேம்ஜி வைத்துள்ளார் என இணையவாசிகள் கூறிவருகின்றனர்.
கங்கை அமரன் தொடர்பான விமர்சனங்களை முன் வைத்த பெரும்பாலானோர்கள் இணையத்தில் இயங்கும் வெகுசன மக்கள் தான். சமீபத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த்தவர்களை கடுமையாக தாக்கிய பாக்யராஜ் அன்று மாலைக்குள்ளேயே பகிரங்க
மன்னிப்பு கேட்டு ‘பெரிய மனுஷன்’ ஆனார். கங்கை அமரன் தன் பாக்கியராஜின் பாதையை தேர்வு செய்வாரா..? அல்லது இளையராஜாவின் பாதையை தேர்வு செய்வாரா? என்பது குறித்து காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!








