Skip to content
December 20, 2025
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » ganga river water is not suitable for bathing report submitted to the assembly
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

“கங்கை நதிநீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை” – சட்டசபையில் அறிக்கை தாக்கல் !

பீகாரில் பெரும்பாலான இடங்களில் கங்கை நீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Author Avatar

Web Editor

March 3, 20257:54 am assemblybathingbihaarGanga RiverREPORTsubmittedWater

பீகார் மாநில சட்டசபையில் சமீபத்தில் 2024-2025 நிதியாண்டுக்கான பீகார் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பீகாரில் உள்ள கங்கை நதி நீரின் தரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “பீகாரில் கங்கை நதியின் தரத்தை 34 இடங்களில் பீகார் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து வருகிறது. 2 வாரங்களுக்கு ஒரு தடவை இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

அதில், பீகாரில் பெரும்பாலான இடங்களில் கங்கை நதி நீரில் ‘கோலிபாம்’ என்ற பாக்டீரியா சார்ந்த நுண்கிருமிகள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், பீகாரில் பெரும்பாலான இடங்களில் கங்கை நீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை.

கங்கை மற்றும் அதன் உபநதிகளின் கரைகளில் அமைந்துள்ள நகரங்களில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும், சாக்கடையும் கங்கையில் கலப்பதுதான் இதற்கு காரணம் ஆகும். பாட்னா, பக்சார், சாப்ரா, பாகல்பூர், முங்கர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளன.
அதே சமயத்தில், கங்கை நதிநீரில் இருக்கும் இதர அளவீடுகள், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருக்கின்றன.

அவை நீர்வாழ் உயிரினங்கள், வனவிலங்குகள், மீன்கள் ஆகியவற்றின் வாழ்வுக்கு உகந்ததாக இருக்கின்றன, நீர்ப்பாசனத்துக்கும் ஏற்றதாக இருக்கின்றன”. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

இந்த வாரம் ரிலீஸான படங்களில் எது டாப் ?

By Web Editor December 20, 2025

“வாக்காளர்களை சேர்க்கும் பணியில் பாமக நிர்வாகிகள் முழு வீச்சில் ஈடுபட வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

By Web Editor December 20, 2025

“பாஜகவின் சீ டீம் தான் விஜய்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

By Web Editor December 20, 2025

“தூய்மைப் பணியாளர் இழப்புக்கு ஊழல் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

By Web Editor December 20, 2025
#ट्रेंडिंग हैशटैग:assemblybathingbihaarGanga RiverREPORTsubmittedWater

Post navigation

Previous Previous post: “தேர்வில் வென்று வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்” – பிளஸ் 2 மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
Next Next post: கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading