பட்டினப்பாக்கத்தில் கரைக்கப்படாமல் இருக்கும் விநாயகர் சிலைகள் – விரைவில் அப்புறப்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் உறுதி

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில், கரைக்கப்படாமல் இருக்கும் பெரிய விநாயகர் சிலைகள் அப்புறப்படுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக…

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில், கரைக்கப்படாமல் இருக்கும் பெரிய விநாயகர் சிலைகள் அப்புறப்படுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் முக்கிய பகுதிகளில்1,343 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்பானூர் ஆகிய 4 கடற்பகுதிகளில் விநாயகர் சிலை கரைக்க அனுமதி வழங்கப்பட்டு, சிலைகள் கரைக்கப்பட்டன.

இதில், பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளில் 50-க்கும் மேற்பட்ட சிலைகள் கரையாமல், கடலோரம் கிடந்தன. இதனால் அப்பகுதி மக்களும், மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையும் படியுங்கள் : லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு – சொத்து விவரங்களை தாக்கல் செய்தார் நடிகர் விஷால்

இந்நிலையில், இதுகுறித்து நியூஸ்7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், பட்டினப்பாக்கம் கடற்கரையில், கரைக்கப்படாமல் இருக்கும் பெரிய விநாயகர் சிலைகள் அப்புறப்படுத்தப்படும் என்றும், அந்த சிலைகளால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.