வெள்ளையனே வெளியேறு இயக்க விழாவில் பங்கேற்க சென்ற காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியை தடுத்து நிறுத்திய மும்பை போலீசார் அவரை கைது செய்தனர்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அன்றைய தினம் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது.
வெள்ளையனே வெளியேறு தினத்தன்று மும்பையின் கிராந்தி மைதானத்தில் மெளன ஊர்வலம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனும், அருண் மணிலால் காந்தியின் மகனுமான துஷார் காந்தி சென்றார். அப்போது மும்பை போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்து சாண்டா குரூஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இது தொடர்பாக அவர் விடுத்ததுள்ள ட்விட்டர் பதிவில், வரலாற்று சிறப்புமிக்க தினத்தில் கைது செய்யப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டவுடன் பேரணியில் கலந்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.







