‘காந்தாரா 2’ படத்தின் எழுத்துப் பணிகளை தொடங்கியுள்ளதாக படத்தின் இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
ரிஷாப் ஷெட்டி இயக்கி, நடித்த காந்தாரா திரைப்படம் 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ 400 கோடிக்கு மேல் சம்பாதித்து பிளாக்பஸ்டர் வெற்றியாக உருவெடுத்தது. பிப்ரவரியில் படம் 100 நாட்கள் திரையரங்குகளை நிறைவு செய்த நிலையில், ரிஷப் காந்தாரா -2 பயணத்தை முன்னோக்கி கொண்டு செல்வதாக அறிவித்தார்.
மார்ச் 22, புதன்கிழமை, உகாதி தினமான இன்று, கதையை எழுதத் தொடங்கியதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக ஊடக அறிவிப்பை வெளியிட்டார் மற்றும் அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்கு உகாதி வாழ்த்துக்களை தெரிவித்தார். “உகாதி வாழ்த்துக்கள்! காந்தார எழுதுதல் தொடங்குகிறது!”, என்று அவர்அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/shetty_rishab/status/1638483025922232320?s=20
தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே ஃபிலிம்ஸும் இதே பதிவை பகிர்ந்துகொண்டு ட்வீட் செய்தது, “உகாதி மற்றும் புத்தாண்டுக்கான இந்த நல்ல சந்தர்ப்பத்தில், கந்தாராவின் இரண்டாம் பாகத்திற்கான எழுத்துப்பணி தொடங்கிவிட்டது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உங்களிடம் கொண்டு வர நாங்கள் ஆவலாக உள்ளோம். இயற்கையுடனான நமது உறவைக் காட்டும் மற்றொரு வசீகரமான கதை..” என தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே ஃபிலிம்ஸ் ட்விட் செய்துள்ளது.







