இந்த நூற்றாண்டின் சிறந்த 25 திரைப்படங்களில் ஒன்றாக காலா தேர்வு!

இந்த நூற்றாண்டின் சிறந்த 25 திரைப்படங்களில் ஒன்றாக காலா தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இந்த நூற்றாண்டின் சிறந்த 25 படங்கள் குறித்த அறிவிப்பை பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டியூட்டின் மாத இதழான சைட் அண்ட் சவுண்ட் என்ற…

இந்த நூற்றாண்டின் சிறந்த 25 திரைப்படங்களில் ஒன்றாக காலா தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நூற்றாண்டின் சிறந்த 25 படங்கள் குறித்த அறிவிப்பை பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டியூட்டின் மாத இதழான சைட் அண்ட் சவுண்ட் என்ற இதழ் வெளியிட்டுள்ள நிலையில் அதில் ரஜினிகாந்த் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘காலா’ திரைப்படம் இடம் பெற்றுள்ளது என்பதும் இந்த பட்டியலில் இடம் பெற்ற ஒரே தமிழ் படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நூற்றாண்டின் சிறந்த 25 படங்கள் குறித்த பட்டியலை சைட் அண்ட் சவுண்ட் என்ற மாத இதழ் வெளியிட்டுள்ள நிலையில் அதில் ஓல்டு பாய்,  ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ், இன்லேண்ட் எம்பயர்,  பார்பரா,  ப்ரைட்ஸ் மெய்ட்ஸ் உட்பட சில படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ திரைப்படம் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  மும்பை தாராவியில் உள்ள தமிழ் மக்களின் பிரச்னைகளை அலசும் இந்த படம் வசூல் அளவில் சுமாரான வெற்றி பெற்ற நிலையில் இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.