ஆபீஸ் மீட்டிங்கில் சிப்ஸ் சாப்பிட்டு, தான் மாட்டிக் கொண்டதாக ஒரு பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவு வைரல் ஆனதை தொடர்ந்து Lays வேடிக்கையான பதில் ஒன்றை அளித்துள்ளது.
பொதுவாக மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் நடக்க கூடிய சம்பவங்கள் பற்றி பகிர சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள். அப்படி பகிரப்படும் கதைகள் சில சமயம் வேடிக்கையானதாகவும் இருக்கும், மோசமான நிகழ்வை சந்தித்த பதிவாகவும் இருக்கும், அந்த வகையில் வந்தனா ஜெயின் என்கிற பெண், ஒரு முக்கியமான நிகழ்வின் போது சிப்ஸ் சாப்பிட்டதால் நடந்த நகைச்சுவையான தருணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில் 28 வயதான அந்தப் பெண், ஒரு ஆன்லைன் மீட்டிங்கில் கலந்து கொண்டிருந்த
போது, தனது மைக்ரோஃபோன் ஆன் செய்யப்பட்டுள்ளதை அறியாமல், சிப்ஸ் பாக்கெட்டை பிரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாரம் . சில நிமிடங்களுக்குப் பிறகு அவரது மேலாளர் , அவரின் சாட் பாக்ஸுக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். அதில் “தயவுசெய்து உங்கள்
மைக்கை Off செய்யுங்கள் ? நீங்கள் சிப்ஸ் சாப்பிடும் சத்தம் மிகவும் அதிகமாக உள்ளது.” என அவர் தெரிவித்திருந்தாராம்.
இந்த நிகழ்வு குறித்து, மேலாளர் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை ஸ்னாப்ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த வந்தனா “நான் ஒரு மீட்டிங்கில் இருந்தபோது, எனது மேலாளர் இதை எனக்கு குறுஞ்செய்தியாக அனுப்பினார். நான் சிக்கலில் இருக்கிறேனா?” என்ற நகைச்சுவையான கேள்வியோடு பதிவிட்டிருந்தார்.
I was in a meeting when my manager texted me this 😭 …. Am I in trouble? pic.twitter.com/XwSsRUnDjS
— Poan Sapdi (@VandanaJain_) May 22, 2023
இந்த ட்விட் பகிரப்பட்டதிரிலிருந்து கிட்டத்தட்ட 5.6 லட்சத்திற்கும் அதிகமான நபர் பார்த்து
பகிரப்பட்டுள்ளதோடு, அதிகப்படியான லைக்குகளையும் குவித்து வருகிறது. இந்நிலையில், வந்தனா பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக லேஸ் நிறுவனமும் “Getting in trouble for all the right reasons.” என்ற வாசகத்தை வேடிக்கையான முறையில் ட்விட்டரில் பதிவிட்டு பதிலளித்து உள்ளது.
Getting in trouble for all the right reasons.
— Lay's India (@Lays_India) May 23, 2023
- பி.ஜேம்ஸ் லிசா