முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதி: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 36 ஆயிரத்து 805 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்கும் வகையில் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 182.74 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ள நபர்களின் குடும்பத்தினர், கொரோனா நோய் தொற்றினால் இறந்ததற்கான இறப்பு சான்றிதழ் மூலம் நிவாரண தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகளில் முதலமைச்சர் படம்

Halley Karthik

ஓமைக்ரான் பரவும் முதல் புகைப்படம் வெளியீடு

Halley Karthik

இந்தியாவில் சற்று அதிகரித்த கொரோனா தொற்று

Halley Karthik