முக்கியச் செய்திகள் தமிழகம்

ஞாயிறு முழு ஊரடங்கு; வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படுகிறது

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமையன்று வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வரும் ஞாயிற்றுக்கிழமை ( 09.01.2022 ) பொது ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கருத்தில்கொண்டு 09.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா முடப்படுகிறது. அதைத்தவிற மற்ற வார நாட்களில் நிலைத்த வழிக்காட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு திறக்கப்படும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பூங்காவிற்கு வருகைதரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும், பரிசோதனையில் உடல் வெப்பநிலை மாறுபாடுகள் உள்ளவர்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதியில்லை.

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூங்காவினுள் பல்வேறு இடங்களில் கை கழுவும் வசதிகள் மற்றும் தானியங்கி கை சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன.

பார்வையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக 2 மீட்டர் தூர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் இல்லாதவர்கள் நுழைவுசீட்டு வழங்கும் இடத்தில் முகக்கவசங்களை வாங்கி கொள்ளலாம். முகக்கவசம் அணியாதவர்கள் பூங்காவினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

பூங்காவிற்குள் நுழையும் பார்வையாளர்கள் கிருமி நீக்கம் செய்யும் கால் குளியல் (பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல்) வழியாகவும், வாகனங்கள் நுழையும்போது டயர்கள் கிருமிநாசினியில் நனைந்த பிறகே செல்ல வேண்டும்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கோவிட் தொடர்பான வழிமுறைகள் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் கோவிட் நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்கள் அடங்கிய பலகை பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களின் நடமாட்டம் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவ்வப்போது கொரொனா நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.

பார்வையாளர்களால் கோவிட் தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை மேற்பார்வையிடவும் மற்றும் கண்காணிக்கவும் துணை இயக்குநர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அவர்களின் தலைமையில் ஒரு காண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது

பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் பாதுகாப்பிற்காக கோவிட் நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பேருந்து நிலையத்தில் மாணவர்கள் தகராறு; 7 பேரிடம் விசாரணை

Arivazhagan Chinnasamy

அரசு பேருந்தில் தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழப்பு

EZHILARASAN D

மதுரையில் மதநல்லிணக்க கறி விருந்து!

G SaravanaKumar