முக்கியச் செய்திகள் தமிழகம்

முழு ஊரடங்கு: பயணிகளிடம் அதிக கட்டணம் – டிஜிபி சைலேந்திரபாபு நடவடிக்கை

முழு ஊரடங்கின் போது, ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

முழு ஊரடங்கின் போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் சிறப்பாக பணியாற்றி இருப்பதாக அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களை பாராட்டி டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், காவல் அதிகாரிகள் பொறுப்புடனும், பொறுமையுடனும், மனிதாபிமானத்துடனும், சாமர்த்தியத்துடனும் பணியாற்றியதாக பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், அதிகாரிகள் ரோந்து சென்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியது காவல்துறை மீது மக்களுக்கு நன்மதிப்பையும், நம்பிக்கையையும், ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், முழு ஊரடங்கின் போது வெளியூர் சென்று திரும்புவோர் ரயில் நிலையம், பேருந்து நிலையம் வந்த பின்பு வீடு செல்வதற்கு ஆட்டோ மற்றும் டாக்ஸி கிடைக்காமல் அவதியுற்றதாகவும், சில ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இனிவரும் முழு ஊரடங்கு நாட்களில் ஆட்டோ மற்றும் டாக்ஸியில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் பயணிக்க வசதி ஏற்படுத்தி கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டிற்குள் புகுந்தது ஓமிக்ரான் வைரஸ்

Saravana Kumar

ஜாமீனில் விடுதலையானார் ஆர்யன் கான்

Halley Karthik

மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு

Saravana Kumar