டாக்டர் பட்டம் இனி கொடுத்தாலும் இடது கையால் புறக்கணிக்க வேண்டும்..! – கவிஞர் வைரமுத்து பதிவு

டாக்டர் பட்டத்தை விட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது என்றும், இனி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டாலும் அதனை இடதுகையால் புறக்கணிக்க வேண்டும் என்றும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகியும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

டாக்டர் பட்டத்தை விட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது என்றும், இனி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டாலும் அதனை இடதுகையால் புறக்கணிக்க வேண்டும் என்றும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட தியாகியும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யாவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியது.  ஆனால் அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் ஆளுநருக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.

மேலும் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி காட்டியும்,  கருப்பு பலூன்கள் பறக்க விட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அதேபோல், இவ்விழாவை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் புறக்கணித்து எதிர்ப்பை பதிவு செய்தார்.

இதையும் படியுங்கள் : வாரம் 70 மணி நேர வேலை – காலத்தின் தேவையா? உழைப்புச் சுரண்டலுக்கான வழிமுறையா?

இந்நிலையில் இனி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டாலும் அதனை இடதுகையால் புறக்கணிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

https://twitter.com/Vairamuthu/status/1720267098809884740

இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், “டாக்டர் பட்டத்தைவிட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது. இந்தத் தப்புத் தாமதத்திற்குப் பிறகு ஒப்புதல் தந்தாலும் பெரியவர் சங்கரய்யா, அதை இடக்கையால் புறக்கணிக்க வேண்டும். பெயருக்கு முன்னால் அணிந்து கொள்ள முடியாத மதிப்புறு முனைவர் பட்டத்தைவிடத் தீயைத் தாண்டி வந்தவரின் தியாகம் பெரிது. கொள்கை பேசிப் பேசிச் சிவந்த வாய் அவருடையது. இனி இந்த வாடிப்போன வெற்றிலையாலா வாய்சிவக்கப் போகிறது?” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.