அண்ணாத்தை படம் நிறைய நெகட்டிவ் ரிவ்யூக்களை பெற்றது. இதற்குப் பிறகு நல்ல படங்கள் நடிப்பதிலிருந்து கொஞ்சம் கேப் விட்ட ரஜினிகாந்த் நல்ல கதைக்காக வெயிட் பண்ணி ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். ஹூக்கும் பாடல் வரிகள் வெளியானது முதல் ஆடியோ லான்ச் வரை தொடர்ந்து பேச்சு பொருளாக இருந்துள்ளது ஜெயிலர். இததாண்டி படத்துடை ட்ரெய்லர் வெளியாகும் போது இந்த படம் விக்ரம், பீஸ்ட் இப்படி எல்லாம் கலந்த கலவையாக இருக்கிறது என்று பேசப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்ற பேச்சுக்கள் வேற போக ஆரம்பித்தது. இப்படி இவ்வளவு பேச்சுகளுக்கு இடையிலும் தலைவர ஸ்கிரீன்-ல பாக்குற எதிர்பார்ப்பு கொஞ்சம் கூட குறையவில்லை.
படத்தின் கதை:
ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணின் மகன் வசந்த் ரவி. வசந்த் ரவியின் மனைவி மற்றும் மகன் மிருனா மேனன், ரித்திக். இவர்கள் அனைவரும் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் வசந்த் ரவியை ஒரு ரவுடி கும்பல் கொலை செய்கிறது. அதற்காக ரஜினிகாந்த் அவதாரம் எடுக்கிறாற என்பது தான் படத்தின் மீதி கதை.
இந்த படத்தில் ப்ளாஷ் பேக் கதை உள்ளது. இதைப் பார்க்கும் போது பாட்ஷா படத்தின் என்ட்ரி ஞாபகம் வருகிறது. ப்ளாஷ் பேக்கில் உள்ள ரஜினியின் லுக் கொஞ்சம் கூட பொருத்தமில்லை. ஆனால் ஸ்டைல் மற்றும் ஆக்சனில் ஸ்கோர் செய்கிறார் ரஜினி.
ரஜினி மற்றும் ரம்யாவை திரையில் காணும் போது படையப்பா படத்தில் இடம்பெற்றிருக்கும் டையலாக்கான அடுத்த ஜென்மம்ன்னு ஒன்னு இருந்தா நான் உன்ன அடஞ்சே தீறுவேன் என்ற டையலாக் ஞாபகம் வருகிறது. படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வரும் சிவ் ராஜ்குமார், மோகன் லால் மற்றும் ஜாக்கி ஷெரிப்பின் சீன்கள் ஆடியென்ஸ் இடம் பயங்கர ஸ்கோர் செய்கிறது. விநாயகன் மிகப்பெரிய வில்லனாக நடித்திருக்கிறார். ரஜினிக்கு உள்ள ஸ்கோப் போல விநாயகனுக்கும் இருக்கிறது. இதுபோக யோகி பாபு மற்றும் ரஜினிகாந்தின் காமெடி சீன் பெருசா வொர்க் அவுட் ஆகல.
காவாலா பாடலில் அசத்திய தமன்னா சில காட்சிகளில் மட்டுமே தோன்றுகிறார்.. இது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. காவாலா, ஹூக்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகும் போது காவாலா பாடல் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனால் படத்துடன் பார்க்கும் போது ஹூக்கும் பாடல் தான் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.
அனிருத்:
பக்கா இசையில் மிரட்டியுள்ளார் அனிருத். இருந்தாலும் அங்க அங்க விக்ரம் படத்தில் போட்ட மியூசிக் இடம்பெறுகிறது. பாடல்கள் அனைத்தும் மாஸ்.
விக்ரம் படத்தை நினைவுபடுத்துகிறது
கதையில் தன் மகனைக் கொன்றவனைப் பழிவாங்கும் ரஜினியின் கேரக்டர் ஒரு கட்டத்தில் விக்ரம் படத்தை ஞாபகப்படுத்துகிறது. இன்னொரு பக்கம் சிவ்ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெரிப் என ஸ்டார்களை இணைக்கும் போது லோகேஷ் கனகராஜ் செய்யும் சம்பவத்தைச் செய்திருக்கிறாரோ நெல்சன் என்ற கேள்விகள் வருகிறது.
லோகேஷ் கனகராஜுக்கு என்று ஒரு ஸ்டைல் உள்ளது. எப்போதும் அவர் படங்களில் முன்னணி நடிகர்களை உள்ளிழுப்பது வழக்கம். இப்படிப் பல ஸ்டார்களை வைத்து படம் பண்ணுவதற்கென்று ஒரு சில காரணங்களும் இருக்கின்றது. உதாரணத்திற்கு டாப் ஹூரோக்களை உள்ளிழுக்கும் போது அவர்களுக்கென்று உள்ள தனிப்பட்ட ரசிகர்கள் படங்களை பார்க்க விரும்புவார்கள். அதனால் படத்தின் வசூலும் கூடும். இதனை அப்படியே காப்பி செய்வது போல் இருந்தது இந்த ஜெயிலர் படத்தில். அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் படங்களில் நடித்த சின்ன சின்ன கதாபாத்திரங்களைக் கூட அவர் படங்களில் கேரி செய்து வருவார். இந்த ஜெயிலர் படத்திலும் நெல்சன் அந்த டச்சை கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ஜெயிலர் படம் முழுக்க தலைவர் ஸ்டைல். மற்றபடி கதையில் சிறு முன்னேற்றம் இருந்திருக்கலாம். நெல்சனுக்கு இந்த படம் கைகொடுக்குமா என்பது சந்தேகம் தான்.










