நட்பிற்கு ஏது பாகுபாடு: மீனுடன் நட்புக்கொண்ட மனிதன்!

ஆழ்கடல் நீச்சல் வீரருடன் மீன் ஒன்று செல்லமாக பழகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மையம் நடத்தி வரும் அரவிந்த், சுற்றுலாப் பயணிகளுடன் ஆழ்கடலுக்கு சென்று வருவதை வழக்கமாக…

ஆழ்கடல் நீச்சல் வீரருடன் மீன் ஒன்று செல்லமாக பழகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மையம் நடத்தி வரும் அரவிந்த், சுற்றுலாப் பயணிகளுடன் ஆழ்கடலுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆழ்கடலுக்கு சென்ற அரவிந்த் வலையில் சிக்கி இருந்த பன்னி வகை மீன் ஒன்றை மீட்டுள்ளார். இதையடுத்து அந்த மீன் அரவிந்துடன் நட்பாகப் பழகி வருகிறது.

அப்போதிலிருந்து அந்த மீன் அரவிந்துடன் நட்பாக பழகி வந்துள்ளது, அரவிந்த் ஆழ்கடலுக்கு செல்லும் போதெல்லாம் அந்த மீன் அவரை மட்டும் தொட்டு விளையாடவும் மற்றவர்களை கண்டால் தூரம் ஓடுகிறது. தற்போது அரவிந்த் அந்த மீனுடன் நட்பு பழகும் வீடியோவை வெளியிட்டுள்ளார். பிற செல்ல பிராணிகளை போல மீன் வகைகளும் பழகும் எனவும் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.