அதிபர் தேர்தலில் முறைகேடு : டிரம்ப் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது அமெரிக்க நீதிமன்றம்!

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜியாவில் முடிவுகளை மாற்றி அமைக்க முயன்றதாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான குற்றச்சாட்டை அந்நாட்டு மாகாண நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க…

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜியாவில் முடிவுகளை மாற்றி அமைக்க முயன்றதாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான குற்றச்சாட்டை அந்நாட்டு மாகாண நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா்தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடனை எதிா்த்துப் போட்டியிட்டார். இதில் ஜோ பைடன் வெற்றி பெற்தாகக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜார்ஜியாவில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக டிரம்ப் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், தோதல் முடிவு சான்றளிக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் கடந்த 2021 ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது அங்கு சென்ற டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனா். இதில் 5 போ் உயிரிழந்தனா்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் அதிபர் தேர்தலில் ஜார்ஜியாவில் முடிவுகளை மாற்றி அமைக்க முயன்றது தொடர்பான டிரம்ப் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது. இந்நிலையில் ஜாாஜியா நீதிமன்றமும் தற்போது டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 18 பேர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.