முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு நாள் : நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் அடல் அடல் பிஹாரி வாஜ்பாய் 5ஆவது நினைவு நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவு இடத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். இந்தியப் பிரதமராக 3…

முன்னாள் பிரதமர் அடல் அடல் பிஹாரி வாஜ்பாய் 5ஆவது நினைவு நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவு இடத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

இந்தியப் பிரதமராக 3 முறை பதவி வகித்த அடல் பிஹாரி வாஜ்பாய் மக்களவை உறுப்பினராக 9 முறையும், மாநிலங்களவை உறுப்பினராக 2 முறையும் இருந்தவர். ஏறக்குறைய 50 ஆண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி  மறைந்தார்.

சிறந்த எழுத்தாளர், வசீகர பேச்சாளர், கவிஞர், கட்சி வேறுபாடின்றி அனைவராலும் விரும்பப்படும் ஆளுமையாக திகழ்ந்த வாஜ்பாயின் 5ஆம் ஆண்டு  நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதனையடுத்து டெல்லியில் உள்ள அவரது நினைவுடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.