பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறவிட்ட ரூ. 15,000 மற்றும் 4 பவுன் தங்கச் சங்கிலி, ஒரு செல்போன் உள்ளிட்டவற்றை தென்காசி இருப்புப் பாதை காவல் துறையினர் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் திலகவதி. இவர் கேரளா மாநிலம், எர்ணாகுளம் பகுதிக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வற்காக சென்றுள்ளார். நிகிழ்ச்சியை முடிந்த பின்னர் திருநெல்வேலி – பாலக்காடு விரைவு ரயிலில் முன் பதிவு செய்த பெட்டியில் திலகவதி பயணித்து தென்காசியில் இறங்கியுள்ளார்.
அப்போது, ரயிலில் வைத்த தன்னுடைய பேக்கை எடுப்பதற்கு திலகவதி மறந்துவிட்டார். இதுகுறித்து, தென்காசி இருப்புப் பாதை காவல் நிலையத்திற்கு திலகவதி தகவல் தெரிவித்தார். உடனடியாக அந்தக் காவல் துறையினர் திருநெல்வேலி இருப்பு ப்பாதை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, 4 பவுன் தங்கச் சங்கிலி, ரூபாய் 15,000, ஒரு செல்போன் உள்ளிட்டவற்றை போலீஸார் பத்திரமாக மீட்டு திலகவதியிடம் ஒப்படைத்தனர்.







