முக்கியச் செய்திகள் இந்தியா

கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் இருந்து மன்மோகன் சிங் டிஸ்சார்ஜ்!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

கொரோனா தொற்றின் 2 வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தத் தொற்று காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. அரசியல், சினிமா பிரபலங்களும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் பிரதமரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு கடந்த 19 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்ட அவருக்கு, அங்கு சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்தது. இந்நிலையில் அவர் குணமடைந்ததை அடுத்து, மருத்துவமனையில் இருந்து தற்போது வீடு திரும்பி உள்ளார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் இப்போது நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
SHARE

Related posts

நாமக்கல்லில் குட்கா விற்பனை செய்த இருவர் கைது

Jeba Arul Robinson

மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்ட கோயில்!

Jayapriya

இது கொண்டாட்டத்திற்கான நேரமில்லை: ஊரடங்கு தளர்வு குறித்து உயர்நீதிமன்றம்!

Ezhilarasan