அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்!

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் (வயது 90) வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். எம்ஜிஆர் அ.தி.மு.க-வை தொடங்கியபின் நடைபெற்ற முதல் தேர்தலில் ஏம். எல். ஏவாக தேர்வு செய்யப்பட்டார் அரங்கநாயகம். மறைந்த முன்னாள்…

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் (வயது 90) வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.

எம்ஜிஆர் அ.தி.மு.க-வை தொடங்கியபின் நடைபெற்ற முதல் தேர்தலில் ஏம். எல். ஏவாக தேர்வு செய்யப்பட்டார் அரங்கநாயகம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் அமைச்சரவையில் தொடர்ந்து அங்கம் வகித்தவர். தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிகம் தோன்றுவதற்கு இவரே முக்கிய காரணமாக இருந்தவர். கோவை மேற்கு, தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளில் தலா இரண்டுமுறை எம். எல். ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் வயது மூப்பின் காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவருக்கு வயது 90 ஆகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.