முக்கியச் செய்திகள் தமிழகம்

மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திடீர் கைது

திருநெல்வேலி எம்.பி ஞானதிரவியம் உள்ளிட்ட திமுகவினரை கைது செய்யக் கோரி நேற்றிரவு போராட்டம் நடத்திய, மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் பாஜக நிர்வாகி பாஸ்கர் என்பவர், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் அவர் ஆதரவாளர்களால் தாக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. இதை கண்டித்து, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியார் சிலை முன்பாக, முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நள்ளிரவில் தனது ஆதரவாளர்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினரை கலைந்து செல்ல காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். தன்னை கைது செய்தாலும் போராட்டம் தொடரும் என பொன் ராதாகிருஷ் ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் அவரது மகன்கள் சேவியர்ராஜா, தினகர் உட்பட திமுகவினர் 30 பேர் மீது பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

Halley karthi

தமிழ்நாட்டில் புதிதாக 1,724 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Saravana Kumar

திருநங்கைகள் நலன் காக்கும் திமுக அரசு!