கத்தார் நாட்டின் முன்னாள் அரசர் காலமானார்

கத்தார் நாட்டின் முன்னாள் அரசர் ஷேக் ஹமத் காலமானார்

கத்தார் நாட்டின் முன்னாள் அரசர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி இன்று (ஜூலை 12) காலமானார். அவருக்கு வயது 74 ஆகும்.

மேற்காசிய நாடுகளில் ஒன்றான கத்தாரின் மன்னராக 1995 முதல் 2013 வரை இருந்தவர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி. இவரது ஆட்சி காலத்தில் கத்தார் உலகளவில் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்றது.

ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி ஆட்சி காலத்தில் 2004-ல் கத்தாரின் முதல் நிரந்தர அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் நகராட்சித் தேர்தல்களில் பெண்கள் முதல் முறையாக வாக்களிக்கவும் தேர்தலில் போட்டியிடவும் உரிமை பெற்றனர்.

மேலும், அவரது பதவிக்காலத்தில் 2012-ல் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு தோஹா ஒப்பந்தம், ஃபதா-ஹமாஸ் தோஹா ஒப்பந்தம் ஆகியவையும் கையெழுத்தாயின. ஷேக் ஹமாத் 2013-ல் பதவியிலிருந்து விலகி, அப்போது 33 வயதாக இருந்த தனது மகன் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.