எதிர்க்கட்சிகள் மாநாடு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பேட்டி!

‘எதிர்க்கட்சிகளின் மாநாடு என்பது ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல் தான்’ இருக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.…

‘எதிர்க்கட்சிகளின் மாநாடு என்பது ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல் தான்’ இருக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ”மாமன்னன் திரைப்படம் இன்னும் பார்க்கவில்லை பார்த்து விட்டு கருத்து கூறுகிறேன், நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு வருவதில், பத்திரிக்கையாளர்களுக்கு உரிமையும் ஜனநாயக கடமையும் உள்ளது.

மேலும், கடந்த காலங்களில் இது போல் எதிர்கட்சிகள் பல்வேறு மாநாடு நடத்தியுள்ளனர். ‘எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஆண்டிகள் கூடி மடம் கட்டியது போல் தான் இருக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

– கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.