காங்கேயம் அருகே ஊருக்குள் சுற்றித்திரியும் சிறுத்தைகள்!

சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க, வனத்துறையினர் முயற்சி செய்தனா். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த ஊதியூரில் சாமிநாதன் என்பவர் தோட்டத்தில் இருந்த இரண்டு மாதக் கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்து கொன்றது. இதேபோல் மற்றொரு…

சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க, வனத்துறையினர் முயற்சி செய்தனா்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த ஊதியூரில் சாமிநாதன் என்பவர் தோட்டத்தில் இருந்த இரண்டு மாதக் கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்து கொன்றது. இதேபோல் மற்றொரு கன்றுக்குட்டி, இரண்டு ஆடுகளையும்  அடித்து கொன்றுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ள நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற  வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்து, சிறுத்தையைக் கண்காணிக்க கேமராக்களை பொருத்தினர்.

மேலும் , சிறுத்தையை பிடிக்க உடுமலையில் இருந்து கூண்டு மற்றும் சிறுத்தை பிடிக்கும் சிறப்பு குழுவும், தற்காப்பு உபகரணங்கள், வலை உள்ளிட்டவையும் வரவழைக்கப்பட்டுள்ளது.

—கா.ரு்பி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.