நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தோநேசியாவை பூர்வீகமாக கொண்ட லார் கிப்பன் (Lar Gibbon) என்ற அறியவகை குரங்குடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, அறிய வகை குரங்கு நடிகர் விக்ரமுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணையை தொடங்கினர். இதனைத்தொடர்ந்து அந்த வீடியோவை விக்ரம் சமூக வலை தளங்களில் இருந்து நீக்கினார்.
இந்த நிலையில், குரங்கு குறித்து தற்போது வரை விக்ரம் தரப்பிலிருந்து எவ்வித விவரங்களையும் தராததால் குரங்கு வாங்கிய மற்றும் உரிமையாளர் ஆவணங்களை எடுத்து வந்து மூன்று தினங்களுக்குள் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு வனத்துறை அதிகாரிகள் நடிகர் விக்ரமுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
நேற்று நடிகர் விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று நோட்டீஸ் அளித்துள்ளனர். மூன்று தினங்களுக்குள் நேரில் வந்து ஆவணங்களை ஒப்படைத்து பதிலளிக்கவில்லை என்றால் வனத்துறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.




