உணவுப் பாதுகாப்பு துறை சார்பில், ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய மூன்று தினங்கள் சென்னை தீவுத்திடலில் மாநில அளவிலான உணவுத் திருவிழா நடைபெறுகிறது.
உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய 3
தினங்கள் உணவுப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவுத்
திருவிழா நடத்தப்படுகிறது. சிங்கார சென்னையில் உணவுத் திருவிழா 2022 என்ற
பெயரில் நடைபெறுகிறது. 3 தினங்கள் நடைபெறும் உணவுத் திருவிழாவில் பல்வேறு
சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு திரைக்கலைஞர்கள், முக்கிய
பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
குறிப்பாக, சமையல் கலைகள் பற்றிய விரிவான பரிந்துரைகள், பாரம்பரிய உணவு
வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், 1,500 குழந்தைகளுக்கு
அடுப்பில்லாமல் எவ்வாறு சமைப்பது போன்றவையும், எதுபோன்ற உணவுகளை
எடுத்துக்கொள்ள வேண்டும், எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும், உணவு வீணாவதைத்
தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கும் வகையில் பாரம்பரிய உணவுத்
திருவிழா நடைபெறுகிறது.
இறுதி நாளான 14ம் தேதி உணவுப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைப்பயணம் காலை 7 மணி முதல் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா








