முக்கியச் செய்திகள் தமிழகம்

மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் பணிகள் தொடரும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் பணிகள் தொடரும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து பல ஆண்டுகள் இந்த பள்ளி மாணவிகள் தொடர் சாதனையை புரிந்து பெருமையை சேர்ந்து உள்ளார்.

மாநகராட்சி கல்வி கூட திறமையை வெளி கொண்டு வர ஜப்பான் வரை சென்று சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலை பள்ளிகளுக்கு பெருமை சேர்த்தனர்.
இந்த பள்ளியில் படிக்கும் 3 மாணவர்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சென்னையிலும் மேல் நாடுகள் போலவே சென்னை துவக்க பள்ளி, உயர்நிலை பள்ளி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பள்ளிகள் தற்பொழுது நல்ல வகையில் வளர்ந்து வருகிறது.

காலம் தவறாமை, மிக தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய சிரமத்தை இந்த மிதிவண்டி போக்குகிறது. போன வாரம் ஆரம்பித்த மிதிவண்டி வழங்கும் நிகழ்வு தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.

அதன் ஒரு பகுதியாக 324 மிதிவண்டிகள் இன்று சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலை பள்ளியில் வழங்க இருக்கிறோம். இந்த பள்ளி என்னுடைய சொந்த பள்ளி போலவே பார்க்கப்படுகிறது.

யாராவது மேல் படிப்பு படிக்க விரும்பினால், கஷ்டப்படும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை நாங்களே எடுத்துக் கொள்வோம் என்றார் மா.சுப்பிரமணியன்.

முன்னதாக, 2021-2022ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1 பயின்ற மாணவ-மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மிதிவண்டிகளில்  முதலமைச்சர் படம் பொறிக்கப்படாமல், சுற்றுசூழல் விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் மட்டுமே இடம்பெற்றன.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும்
விலையில்லா இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், இலவச சைக்கிள்கள் வழங்கப்படாமல் இருந்து வந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் வழங்க அரசாணை வெளியீடு

Vandhana

இனி ஊழியர்களுக்கு வார சம்பளம்! யாருக்கு தெரியுமா?

Arivazhagan Chinnasamy

தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் – அமைச்சர் பதில்

EZHILARASAN D