திரிஷா, விக்ரமை தொடர்ந்து ட்விட்டரில் பெயரை மாற்றிய நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நடிகை திரிஷா, நடிகர் விக்ரமைத் தொடர்ந்து நடிகர்கள் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ட்விட்டரில் தங்களது பெயரை மாற்றியுள்ளனர். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில்…

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நடிகை திரிஷா, நடிகர் விக்ரமைத் தொடர்ந்து நடிகர்கள் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ட்விட்டரில் தங்களது பெயரை மாற்றியுள்ளனர்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் என முக்கிய பிரபலங்கள் பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, படத்தின் புரோமோஷன் பணிகளில்  படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.

நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘குந்தவை’ என சமீபித்தில் தனது பெயரை மாற்றியிருந்தார்.  திரிஷாவை தொடர்ந்து நடிகர் விக்ரமும் தனது ட்விட்டர் கணக்கில் ‘ஆதித்த கரிகாலன்’ என பெயர் மாற்றம் செய்தார். இந்நிலையில், திரிஷா, விக்ரமைத் தொடர்ந்து இத்திரைப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ள நடிகர் கார்த்தி மற்றும் அருண்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம்ரவியும் தங்களது பெயரை மாற்றியுள்ளனர்.

கார்த்தி ட்விட்டரில் தனது பெயரை “வந்தியத்தேவன்” எனவும், ஜெயம் ரவி “அருண்மொழி வர்மன்”  என்றும் தங்களது ட்விட்டர் பெயரை மாற்றியுள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.