ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டரூ. 84 லட்சம் பறிமுதல்!

அருப்புக்கோட்டையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் கொண்டு சென்ற 84 லட்சம் ரூபாயினை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி பகுதியில் தேர்தல் பறக்கும் படை…

அருப்புக்கோட்டையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் கொண்டு சென்ற 84 லட்சம் ரூபாயினை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியான மண்டல துணை வட்டாட்சியர் நாகேஷ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தியதில், அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 84 லட்சம் பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

விசாரணையில் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் தனியார் ஏஜென்சி நிறுவனம் விருதுநகர் ஸ்டேட் பேங்கில் இருந்து அருப்புக்கோட்டை ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்படுவதாக அதிலிருந்து ஊழியர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் முறையான ஆவணங்கள் இல்லாததால் 84 லட்ச ரூபாயினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.