பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.. ஒரு கிலோ மல்லிகை இத்தனை ஆயிரமா?

மாட்டுத்தாவணி மலர் விற்பனை சந்தையில் வரத்து குறைவு காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு அடுத்த வாரம் தொடர்ந்து 3 நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக பண்டிகை நாட்களில் பூக்களின் விலை உயர்வது வழக்கம். அந்த வகையில், பொங்கல் பண்டிகையை மற்றும் வரத்து குறைவு காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அந்த வகையில், மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி மலர் விற்பனை சந்தையில் வரத்து குறைவு காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் வரை 2000 ரூபாய்க்கு விற்பனை ஆன மல்லிகை நேற்று 6 ஆயிரம் முதல் 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகியது. இன்றும் இதே நிலை தொடர்ந்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் முல்லை 1500 ரூபாய்க்கும், கனகாம்பரம், காக்கரட்டான் உள்ளிட்ட பூக்கள் 1,200 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 1,000, மரிக்கொழுந்து ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.200, அரளி ரூ.250, சம்மங்கி, செவ்வந்தி, பன்னீர் ரோஸ் 120 ரூபாய்க்கும், கோழிக் கொண்டை 60 ரூபாய்க்கும், துளசி 50 ரூபாய்க்கும், தாமரை பூ 20 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.