6வது நாளாக வெள்ள நீரில் புதுச்சேரி ஏனாம் பிராந்தியம்

கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றின் கரை உடைந்து, புதுச்சேரி ஏனாம் பிராந்திய பகுதிகளில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து வருகிறது., 6வது நாளாக ஏனாம் பிராந்தியம் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகிறது.…

கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றின் கரை உடைந்து, புதுச்சேரி ஏனாம் பிராந்திய பகுதிகளில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து வருகிறது., 6வது நாளாக ஏனாம் பிராந்தியம் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகிறது.

தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஆறாவது நாளாக ஏனாம் பிராந்தியம் நீரில் தத்தளித்து வருகிறது.

ஆற்றின் கரை உடைந்து ஊருக்குள் நீர் புகுந்து வருவதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டவுலேஸ்வரம், பாலயோகி நகர், குரு கிருஷ்ணாபுரம், பிரான்ஸ்டிப்பா உள்ளிட்ட கரையோர பகுதிகளை சேர்ந்த கிட்டத்தட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவற்றை அரசு வழங்கி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.