சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மற்றும் தேனி மாவட்டத்தை ஒட்டிய…

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மற்றும் தேனி மாவட்டத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியிலும் கன மழை பெய்து வருகிறது. சுருளி வனப்பகுதியில் உள்ள தூவானம் அணை பகுதி, அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை மற்றும் காட்டு நீருற்று ஓடை பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக, சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும், கன மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

பொதுமக்கள் யாரும் அருவி பகுதிக்கு செல்லாதவாறு வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக கம்பம் கிழக்கு வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்து சுருளியாற்றில் குளித்துச் சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.