வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தேவை-எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக குடியிருப்புக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் காவிரி…

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக குடியிருப்புக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் காவிரி கரையோரம் தங்கியிருந்த மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கி வருகிறார்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில்  அவர் உரையாற்றினார். தொடர்ந்து பள்ளிப்பாளையம் ஆவாரங்காடு முகாமில் தங்கி உள்ள மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக குடியிருப்புக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மக்களை பார்க்க வருவது தெரிந்து திமுக அமைச்சரகள் திடீரென வந்து மக்களை பார்த்து சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.  முகாமில் தங்கவைத்த மக்களுக்கு பொதிய வசதிகள் செய்யவில்லை.

மருத்துவ முகாம் அமைக்கப்படவில்லை . அரியலூர் மாவட்டத்தில் 300 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது. உடனே அமைச்சர்களை அனுப்பி ஆய்வு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும்.

5 நாட்களாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த கண்டுகொள்ளவில்லை. மக்களுக்கு கொடுக்கின்ற பாலில் கூட ஊழல் செய்த அரசாங்கம் திமுக அரசாங்கம்.

ஆவின் நிர்வாகத்தில் விஞ்ஞான முறையில் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. ஊழல் நடைபெற்றுள்ளது உண்மைதான். இதை நாங்கள் கூறவில்லை; மக்கள் கூறுகின்றனர்.
தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.

மேட்டூர் உபரி திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 3 தடுப்பு அணைகள் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் மூலம் ஏரிகளின் ஏரிகளை நிரப்பிருக்க வேண்டும் அந்த திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளது  என்றார் எடப்பாடி பழனிசாமி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.