முக்கியச் செய்திகள் சினிமா

இந்த வாரத்தின் அசத்தலான ஐந்து OTT ரிலீஸ்

வாரவாரம் புதிது புதிதாகக் கேளிக்கைக்குப் பஞ்சமில்லாமல் OTT ல் பல திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரமும் பல  சுவாரசியமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.

OTT இயங்குதளங்கள், மாறுபட்ட மற்றும் பல வகையான திரைப்படங்கள் மற்றும் தொடர்களைப் பார்ப்பதற்கு மிகவும் விருப்பமான ஒரு கேளிக்கை தளங்களாக மாறியுள்ளது. ஏனெனில் இந்த தளங்களில் மக்கள் தங்கள் இருப்பிடத்திலேயே அவர்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் பார்க்க அனுமதிக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் இந்த வாரம் அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், சோனி லிவ், ஜீ5 உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்களின் முழுப்பட்டியல் இதோ.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

1. காந்தாரா: 

தென்மாநிலங்கள் தொடங்கி வட மாநிலங்கள் வரையிலும் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த திரைப்படம் தான் காந்தாரா. விமர்சனம், வசூல் என பல்வேறு வகையில் வரவேற்பைப் பெற்று வரும் காந்தாரா, தற்போது உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இப்படம் முதலில் கன்னட மொழியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற பின் பிற மொழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான இந்தப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் காந்தாரா. இந்நிலையில் நாளை (24-11-2022) ‘காந்தாரா’ படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.

2. செல்லோ ஷோ  (Chhello Show)

இந்தியா சார்பாக 2023ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதில் போட்டியிடக் குஜராத்தி படமான ‘செல்லோ ஷோ’ (Chhello Show) படம் தேர்வானது. பான் நளின் இயக்கத்தில் வெளியான இப்படம் சர்வதேச திரைப்பட திருவிழாக்களிலும் பாராட்டைப் பெற்ற படம். இதையடுத்து இப்படம் இந்தியாவில் குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் 25-ஆம்தேதி வெளியாகிறது.

 

3. படவெட்டு:

மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி மற்றும் அதிதி பாலன் நடிப்பில், கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான மலையாள படமான ‘படவெட்டு’ என்கிற திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாக உள்ளது.

4. சூப் (Chup)

ஹிந்தியில் துல்கர் சல்மான் மற்றும் பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடிப்பில் வெளியான ’சூப்’ படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பால்கி இயக்கத்தில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் வெளியான இந்தப்படம் சினிமா விமர்சகரைத் தேடி தேடி கொல்லும் மிஸ்டரி த்ரில்லர் படமாக ’சூப்’ வெளியானது. ஜீ5 ஓடிடி தளத்தில் இந்தப்படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

5. ப்ரின்ஸ்:

சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தீபாவளிக்குத் திரையரங்குகளில் ப்ரின்ஸ் படம் வெளியானது. தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காபூல் ராணுவ மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு

Halley Karthik

2021 ஆம் ஆண்டின் சிறந்த நபர் எலான் மஸ்க்: ’டைம்ஸ்’ தேர்வு

EZHILARASAN D

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து சென்னையில் விரைவில் மதிமுக சார்பில் போராட்டம்-வைகோ

Web Editor