முக்கியச் செய்திகள் சினிமா

விஜயின் வாரிசு படம் வெளியாவதில் சிக்கல் இல்லை -தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி

வாரிசு திரைப்படத்திற்குத் தெலுங்கு மாநிலங்களில் சிக்கல் இல்லை என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி பேசியுள்ளார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் அவர்களது சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி, நாங்கள் நிர்வாகத்திற்கு வந்து இரண்டு வருடம் ஆகிறது. தேர்தல் குறித்து அடுத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது என்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்த் திரைப்படங்களைப் பண்டிகை காலங்களில் வெளியிடக் கூடாது என்று தெலுங்கு திரைத்துறையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறினார். இந்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்களிடம் பேசியுள்ளோம். சினிமா மொழி கடந்தது. இதனை மொழி பிரச்சினை ஆக்க வேண்டாம் என்று பேசியுள்ளோம். அவர்களும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தாக கூறினர்.

இந்த முடிவைத் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்பப்பெறவேண்டும். எங்களையும் அந்த மாதிரி தீர்மானம் நிறைவேற்ற வைத்துவிடாதீர்கள் என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப உள்ளோம். எங்களைப் பொறுத்தவரை வாரிசு படத்திற்கு எந்தவித சிக்கலும் இல்லை. பொங்கலுக்கு நிச்சயம் வெளியாகும். விஜய் என்ற நடிகருக்காக இப்படி பிரச்சினை வரவில்லை. அங்கு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகிறது. விஜய் படம் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது என பேசினார்.

அத்துடன், திரையரங்குகளில் வெளியான படங்களை 10 வாரங்கள் கழித்துத்தான்‌ ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று திரையரங்குகள் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்த கேள்விக்கு இதுவரை பொதுவெளியில்தான் கோரிக்கை வைத்துள்ளனர். எங்களிடம் கோரிக்கை வைத்தால் அவர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். அட்லியின் கதை திருட்டு விவகாரத்தில் இதுதொடர்பாக ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து என்னைத் தொடர்பு கொண்டு பேசினர். ஜவான் பட்டத்திற்கும் பேரரசு படத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொன்னார்கள். இதுகுறித்து கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”மாணவர்கள் அற்புதங்களை படைப்பார்கள்” – விருது பெற்ற நல்லாசிரியர் பேட்டி

EZHILARASAN D

கைதி எண், ஜெயில் உடை.. ரூ.500-க்கு ஒரு நாள் சிறை வாழ்க்கை!

Gayathri Venkatesan

சூர்யா-சிறுத்தை சிவா படத்திலிருந்து வெளியேறிய ஞானவேல் ராஜா?

EZHILARASAN D