இந்த வாரத்தின் அசத்தலான ஐந்து OTT ரிலீஸ்!

வாரவாரம் புதிது புதிதாகக் கேளிக்கைக்குப் பஞ்சமில்லாமல் OTT ல் பல படங்களும் சீரிஸ்களும் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரமும் பல சுவாரசியமான படங்களும் சீரிஸ்களும் வெளியாகி உள்ளது. OTT இயங்குதளங்கள், மாறுபட்ட…

வாரவாரம் புதிது புதிதாகக் கேளிக்கைக்குப் பஞ்சமில்லாமல் OTT ல் பல படங்களும் சீரிஸ்களும் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரமும் பல சுவாரசியமான படங்களும் சீரிஸ்களும் வெளியாகி உள்ளது.

OTT இயங்குதளங்கள், மாறுபட்ட மற்றும் பல வகையான திரைப்படங்கள் மற்றும் தொடர்களைப் பார்ப்பதற்கு மிகவும் விருப்பமான ஒரு கேளிக்கை தளங்களாக மாறியுள்ளது. ஏனெனில் இந்த தளங்களில் மக்கள் தங்கள் இருப்பிடத்திலேயே அவர்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் பார்க்க அனுமதிக்கிறது.

அந்த வகையில் இந்த வாரம் Netflix, Zee5, Disney Hotstar மற்றும் Amazon Prime வீடியோவில் நீங்கள் பார்க்கக்கூடிய சில சிறந்த வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


சீதா ராமம்:

சீதா ராமம் துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர் நடித்த சீதா ராமன் ஒரு காதல் கதை. இப்படம் வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை வெற்று வருகிறது. ஹனு ராகவபுடி இயக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் சுமந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சீதா ராமம் அமேசான் பிரைமில் தெலுங்கில் மலையாளம் மற்றும் தமிழுடன் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

எங்கு பார்க்க வேண்டும்: அமேசான் பிரைம் வீடியோ
வெளியீட்டுத் தேதி: 9 செப்டம்பர் 2022

தோர்: லவ் அண்ட் தண்டர் :

ரக்னாரோக், தோர்: லவ் அண்ட் தண்டர் என்ற இப்படம் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் (எம்சியு) 29வது படமாகும். இப்படத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், நடாலி போர்ட்மேன், கிறிஸ்டியன் பேல், டெஸ்ஸா தாம்சன், ஜெய்மி அலெக்சாண்டர் மற்றும் ரஸ்ஸல் குரோவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

எங்குப் பார்க்க வேண்டும்: Disney Plus Hotstar
வெளியான தேதி: 8 செப்டம்பர் 2022

பாப்பன்:

இந்த மலையாள மொழி க்ரைம் த்ரில்லர், ஆபிரகாம் மேத்யூ மாத்தன் என்ற தன்னார்வ ஓய்வு பெற்ற அதிகாரி மற்றும் அவரது மகளையும் அவர்களின் விருப்பமில்லாமல் ஒரு கொலை வழக்கை விசாரிக்க பணியில் அமர்த்துகின்றனர். இப்படத்தில் சுரேஷ் கோபி, நீதா பிள்ளை, கோகுல் சுரேஷ், ஆஷா சரத், நைலா உஷா, கனிஹா ஆகியோர் நடித்துள்ளனர்.

எங்குப் பார்க்க வேண்டும்: Zee5
வெளியான தேதி: 7 செப்டம்பர் 2022

ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்:

ஜான் ஆபிரகாம், அர்ஜுன் கபூர், திஷா பதானி மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ள இப்படம் இந்த ஆண்டு ஜூலை இறுதியில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் கதை ஸ்மைலி கில்லர் என்ற பெயரில் தனது காதலி உதவியுடன் பல கொலைகளைச் செய்யும் கார் ஓட்டுநரைச் சுற்றிச் சுழல்கிறது.

எங்குப் பார்க்க வேண்டும்: Netflix
வெளியீட்டுத் தேதி: 9 செப்டம்பர் 2022

இந்தியன் ப்ரிடேட்டர்: தி டைரி ஆஃப் எ சீரியல் கில்லர்.

இது ஒரு நெட்ஃபிக்ஸ் ஒரிஜினல் க்ரைம் த்ரில்லர் ஆவணப்படத் தொடராகும். “அலகாபாத்தில் ஒரு இளம் பத்திரிகையாளர் காணாமல் போகிறார். கெளையாலி என ஒருவரைச் சந்தேகத்திற்கு இடமின்றி கைது செய்கிறார்கள். ழக்கு முடிந்துவிட்டதாக போலீசார் நினைக்கும் போது, ​இறந்த பத்திரிக்கையாளரின் பெயர்களுடன் 13 பெயர்கள் அடங்கிய டைரியையும் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் நடக்கும் விருவிருப்பான கதையே இந்தியன் ப்ரிடேட்டர்: தி டைரி ஆஃப் எ சீரியல் கில்லர்.

எங்குப் பார்க்க வேண்டும்: Netflix
வெளியான தேதி: 7 செப்டம்பர் 2022

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.