சொந்த ஊர் திரும்பும் மீனவர்கள்!

கோவா அருகே ஆழ்கடலில் மாயமான கன்னியாகுமரி மீனவர்கள் 11 பேர் சொந்த ஊர் திரும்புகின்றனர். கன்னியாகுமரியை சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த 23-ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்ற போது கோவா அருகே கப்பல்…

கோவா அருகே ஆழ்கடலில் மாயமான கன்னியாகுமரி மீனவர்கள் 11 பேர் சொந்த ஊர் திரும்புகின்றனர்.

கன்னியாகுமரியை சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த 23-ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்ற போது கோவா அருகே கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில் ஆழ்கடலில் காணாமல் போனதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் காணாமல் போன மீனவர்கள் 11 பேரும் தற்போது சொந்த ஊர் திரும்பி வந்துகொண்டுள்ளனர்.

மீனவர்கள் தற்போது லட்சத்தீவு பகுதியை கடந்து சொந்த ஊருக்கு வந்துகொண்டிருப்பதாக தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். ஆழ்கடலில் கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில் விசை படகின் மேற்பகுதி கடலில் மூழ்கியதாகவும் உடைந்த படகு மூலம் கரை திரும்பி உள்ளதாகவும் வயர்லெஸ் கருவி மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், மற்ற தொலைத்தொடர்பு கருவிகள் கடலில் மூழ்கியதால் இத்தனை நாட்கள் தொடர்பு கொள்ள முடிய வில்லை எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் போன மீனவர்கள் 5 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பி வருவதாக கூறியதால் உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.