முக்கியச் செய்திகள் தமிழகம்

மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து விசாரணைக்குழு: இலங்கை அமைச்சர்

தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து விசாரணைக்குழு அமைத்து தீர்வு காணப்படும் என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை அகதி என்ற வார்த்தையை நீக்கி, மறு வாழ்வு மையம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் மாற்றம் செய்ததை தாம் வரவேற்பதாக தெரிவித்தார்.

இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசிப்பவர்களுக்கு 317 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது வரவேற்கதக்கது என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் குறித்து விசாரணை குழு அமைத்து தீர்வு காணப்படும் என்றும் ஜீவன் தொண்டைமான் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்: சசிகலா வேண்டுகோள்!

Ezhilarasan

’பப்ஜி’ மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்!

Gayathri Venkatesan

பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு!

Saravana