ஓமன் சிறையில் உள்ள தன் கணவரை மீட்டு தரக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
ராமநாதபுரம், திருப்பாலைக்குடி பகுதியை சேர்ந்த மீனவர் வீரசிங்கம். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மீன்பிடி தொழில் செய்வதற்காக ஓமன் நாட்டிற்கு ஏஜென்ட் மூலம் வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு முறையான அனுமதியில்லாததால் ஓமன் நாட்டு போலீசார் இவரை சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த ஆறு மாதமாக ஓமன் நாட்டு சிறைச்சாலையில் உள்ளார். இவரை உடனடியாக மீட்டு தர வலியுறுத்தி அவரின் மனைவி கண்மணி என்பவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். அதில் ஏஜென்ட் மூலம் ஏமாற்றப்பட்டு தவறு ஏதும் செய்யாமல் தற்போது சிறைச்சாலையில் உள்ளதாகவும், தனக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரம் கணவரை மட்டுமே நம்பி உள்ளதாகவும், அவர் வெளிநாட்டு சிறையில் உள்ளதால் குடும்பம் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறைச்சாலையில் உள்ள கணவரை மீட்டுத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு சந்திரனிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
ஸ்ரீ.மரகதம்







