முதல் டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்!

முதலாவது டி20 போட்டியில் இன்று இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.

புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி முதலாவது டி20 போட்டியில் இன்று மோதுகிறது. அங்கு ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் இன்று நடைபெறுகிறது. அயர்லாந்து தொடருக்குப் பிறகு இங்கிலாந்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியை வீழ்த்த, தங்களது சொந்த மண்ணில் ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி தீவிரமாகத் தயாராகி வருகிறது.

இந்திய அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த ஆட்டத்திலாவது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 30 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18-ல் இந்தியாவும், 12-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு தொடங்கும், இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென்1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.