நடிகர் சமுத்திரகனி மற்றும் தம்பிராமையா இணைந்து நடித்து வரும் ராஜா கிளி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சமுத்திரகனி மற்றும் தம்பி ராமையா இணைந்து நடித்த வினோதய சித்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அதைத்தொடர்ந்து தற்போது அந்த கூட்டணி ராஜா கிளி என்ற திரைப்படத்தில் இணைந்துள்ளது. இந்தப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கிய வேடங்களில் பி எம்.எஸ்.பாஸ்கர், பழ.கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவின்.G, இயக்குநர் மூர்த்தி, ‘கும்கி’ அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், ‘கும்கி’ தரணி, தீபா, பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு தினேஷ் இசையமைத்துள்ளார். ‘தில்’, ‘தூள்’, ‘கில்லி’ முதல், சமீபத்தில் வெளியான ‘யானை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய கோபிநாத் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தை வி ஹவுஸ் நிறுவனம் இயக்குகிறது. பெருந்திணைக் காதலை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படம் ஒரு வாழ்வியல் கதை என கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஜா கிளி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்திருந்தது. அதன்படி இன்று மாலை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. யாசகராக உள்ளவரை ராஜாவின் இருக்கையில் அமரவைத்திருப்பது போன்றும் அதன் பின் சமுத்திரகனி நிற்பது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.








