கிஷன் தாஸ், சஞ்சனா நடிக்கும் ‘சீ யூ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…!

‘சீ யூ’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.

நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் நடிகர் கிஷன் தாஸ் ஆகியோர் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கின்றர்.

ஏஆர் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் டி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவஸ்டன் இயக்குகிறார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். போஸ்டரின் படி இந்தப் படத்திற்கு ‘சீ யூ’ (See U) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் கிஷன் நடிப்பில் கடைசியாக வெளியான ஆரோமலே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது. அதே போல் நடிகை சஞ்சனா கடைசியாக லப்பர் பந்து மற்றும் தக்லைப் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.