மதுரை-குருவாயூர் இடையே முதல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இயக்கம்! உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு!

மதுரை-குருவாயூர் இடையே இன்று முதல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ள நிலையில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு குருவாயூர் – புனலூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் மதுரை – செங்கோட்டை மதுரை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை –…

மதுரை-குருவாயூர் இடையே இன்று முதல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ள நிலையில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு

குருவாயூர் – புனலூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் மதுரை – செங்கோட்டை மதுரை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை – கொல்லம் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரயில்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, மதுரை குருவாயூர் – மதுரை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒரே ரயிலாக, மதுரை- குருவாயூர் இடையே இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்தப் புதிய ரயில் மதுரையிலிருந்து இன்றும் குருவாயூரிலிருந்து நாளையும் தனது சேவையைத் தொடங்குகிறது.

அதாவது, மதுரை – குருவாயூர் இடையே இயக்கப்பட உள்ள எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் இருந்து இன்று பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு, நாளை அதிகாலை 2.10 மணிக்கு குருவாயூரை சென்றடைகிறது

அதேபோல், மறுமார்க்கமாக குருவாயூர் – மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் குருவாயூரிலிருந்து நாளை அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு, நாளை இரவு 7.50-மணிக்கு மதுரை சென்றடைய உள்ளது.

இந்த ரயிலானது, மதுரையிலிருந்து புறப்பட்டு விருதுநகர், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக குருவாயூர் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரையில் தொடங்க உள்ள இந்த ரயில் சேவைக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.