சரவெடி தயாரிக்க உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க கோரி, பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஆயிரத்து 400 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றம் பட்டாசு உற்பத்தி தொடர்பாக கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் என்ற மூலப்பொருளை சேர்க்கக் கூடாது எனவும், சரவெடி தயாரிப்பிற்கும் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக மாரனேரி வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகம் முன்பு, ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சரவெடி தயாரிப்பிற்கு உச்ச நீதிமன்றம், விதித்துள்ள தடையை திரும்ப பெற வேண்டும் என்றும், பட்டாசு ஆலைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.