முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவில் 101 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

இந்தியாவில் 101 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

உலகளவில் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் 11 மாநிலங்களில் 101 பேருக்கு ஒமிகார்ன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

தொடர்ந்து பேசிய அவர், உலகம் முழுவதும் 91 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தென்னாப்பிரிக்காவில் டெல்டா வைரஸை விட ஒமிக்ரான் வேகமாக பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாக கூறினார். இந்தியாவில் கடந்த 20 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000க்கும் குறைவாக பதிவாகின்றன. தற்போது நாட்டில் உள்ள மொத்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கையில் கேரளாவில் மட்டும் 40.31% பதிவாகிறது என தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காலநிலை மாற்றம்: இந்தியாவில் ஓராண்டில் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடப்பெயர்வு

Web Editor

தமிழ்நாட்டில் இன்று 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு

EZHILARASAN D

கோடநாடு வழக்கு அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைப்பு

G SaravanaKumar