நடுக்கடலில் கொந்தளித்த தீ : வைரலாகும் வீடியோ

மெக்சிகோ வளைகுடாவில் நடுக்கடலில் கொந்தளித்த தீ, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மெக்சிகோ வளைகுடாவில், அரசு எண்ணெய் நிறுவனமான மெக்சிகன் பெமெக்ஸ், கடலுக்கடியில் எண்ணெய் குழாய்களை பதித்துள்ளது. அதில் ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக எரிவாயு கசிந்ததை…

மெக்சிகோ வளைகுடாவில் நடுக்கடலில் கொந்தளித்த தீ, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மெக்சிகோ வளைகுடாவில், அரசு எண்ணெய் நிறுவனமான மெக்சிகன் பெமெக்ஸ், கடலுக்கடியில் எண்ணெய் குழாய்களை பதித்துள்ளது. அதில் ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக எரிவாயு கசிந்ததை அடுத்து தீப்பிழம்புகள் கடலுக்கு மேல் கொப்பளிக்கத் தொடங்கின.

எரிமலைக் குழம்புகள் போல கொந்தளித்த இந்த தீப்பிழம்புகளை ’நெருப்பு கண்’ என்று சமூக வலைதளங்களில் வர்ணிக்கின்றனர். அந்த தீயை நான்கைந்து கப்பல்கள் தண்ணீரால் போராடி அணைத்தன. ஐந்து மணி நேர போராட்டத்துக்குப் பின் அந்த தீ அணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் எரிவாயு கசிவைத் தொடர்ந்து எண்ணெய் உற்பத்தி தடையின்றி நடைபெறுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தீப்பிழம்புகள் முழுமையாக வெளியேற்றப்பட்டதாகவும் தீ விபத்துக்கான காரணம் குறித்து அந்நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெமெக்ஸில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.